ருசியான ஈரல் வறுவல் ,ஒரு முறை இப்படி வித்தியாசமா செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி!!
Summary: ஈரலை எப்படி சமைத்தாலும் அதன் ருசி அனைவருக்கும் பிடிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மட்டன் கல்லீரல் அதிக சத்து நிறைந்தது. வாங்க இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Ingredients:
500 கிராம் ஆட்டு ஈரல்
2 வெங்காயம்
2 பச்சை மிளகாய்
4 வர மிளகாய்
1 டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது
1 டேபிள்ஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
பட்டை
3 டேபிள்ஸ்பூன் எண்ணை
Equipemnts:
1 கடாய்
Steps:
ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி. லி. தண்ணீர் வீட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும்.
தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும்பத்து நிமிடம் ஊற வைத்து ஒருடேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.
வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலைபோட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி – பூண்டு விழுது, ம.பொடி, ஒருடீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.