காஷ்மீர் சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! அடுத்து அடிக்கடி வீட்டில் காஷ்மீர் சிக்கன் கறி தான்!

Summary: ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவாக இருக்கும். சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் கிரேவியை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சிக்கன் கிரேவி நாம் சாதத்தில் ஊற்றி உண்பதற்கும் அட்டகாசமாக இருக்கும்.

Ingredients:

  • 3/4 கிலோ சிக்கன்
  • 1/4 கப் கடலை எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • 1/2 கப் தயிர்
  • 1/2 கப் பால்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. சுத்தம் செய்த சிக்கனில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு 1-2மணி நேரம் ஊற விடவும்.
  2. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை தனித்தனியாக சேர்த்து மூடி போட்டு 4நிமிடங்கள் பொரிக்கவும்.
  3. பின் துண்டுகளை மாற்றி போட்டு மறுபடியும் 4நிமிடங்களுக்கு பொரித்து எடுக்கவும். இவ்வாறு மீதமிருக்கும் துண்டுகளையும் பொரிக்கவும்.
  4. பின்னர் அதே கடாயில் மீதமிருக்கும் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நெய் சேர்த்து கலந்து விடவும்.
  5. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின் தக்காளி அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  6. பின் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரக தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  7. பின்னர் அடிப்பிடிக்காமல் இருக்க 1/4கப் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
  8. பின் தயிர் சேர்த்து கலந்து மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
  9. பின்னர் பால் சேர்த்து கொதிக்க விடவும். பின் சிக்கன் துண்டுகள் சேர்த்து கலந்து விடவும்.
  10. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20-30நிமிடங்கள் சிக்கனை வேக வைக்கவும்.
  11. சிக்கன் வெந்ததும் கஸ்தூரி மெதி மற்றும் மல்லித்தழை சேர்க்கவும்.
  12. அவ்வளவுதான் சுவையான காஷ்மீரி சிக்கன் மசாலா கறி ரெடி. இது சாதத்தை விட சப்பாத்தி, பரோட்டவிற்க்கு சுவையாக இருக்கும்.