மட்டி - கத்தரிக்காய் தொக்கு ஒரு முறை இப்படி சுவைத்து விட்டால், இதே வேண்டும் என்று அடம் பிடிப்பீப்பார்கள்!
Summary: அசத்தலான சுவையில் வித்தியாசமான மசாலா கலவையோடு சிப்பி (மட்டி) – கத்தரிக்காய்தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றித்தான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
Ingredients:
1/4 கிலோ மட்டி
2 கத்தரிக்காய்
1 கப் சிறிய வெங்காயம்
1 கப் தேங்காய்ப்பால்
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
2 தேக்கரண்டி மிளகாய்தூள்
2 தேக்கரண்டி சோம்புத்தூள்
1 தேக்கரண்டி மல்லித்தூள்
3 பச்சைமிளகாய்
கறிவேப்பில்லை
2 தேக்கரண்டி எண்ணெய்
உப்பு
Equipemnts:
1 கடாய்
Steps:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், நறுக்கிய கத்தரிக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
பின் வெந்த மட்டி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.
கத்தரிக்காய் நன்றாக வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். அத்துடன் கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும். சுவையான சிப்பி (மட்டி) கத்தரிக்காய் தொக்கு தயார்.