காரைக்குடி செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ?

Summary: இந்த கிரேவியை அனைத்து விதமான உணவு பொருட்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் உதரணமாக சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி மற்றும் சாதம் என அனைத்து உணவுகளுக்கும் உடன் வைத்து சாப்பிட ஒரு தரமான கிரேவியாக இருக்கும். இதுபோன்று ஒரு முறை உங்கள் வீட்டில் தயார் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பிட கொடுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உங்கள் செட்டிநாடு மீன் மேக்கர் கிரேவிக்கு மிகப்பெரிய ரசிகர்களாக ஆகிவிடுவார்கள். ஆம், அந்த அளவிற்கு சுவையும், மணமும் நன்றாக இருக்கும். இன்று இந்த செட்டிநாடு மீன் மேக்கர் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 2 கப் மீல் மேக்கர்
  • 1 ½ tbsp எண்ணெய்
  • 2 துண்டு பட்டை
  • 3  கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 1 tbsp சோம்பு
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • தக்காளி பேஸ்ட்
  • 1 ½ tbsp உப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 ½ tbsp மிளகாய்த்தூள்
  • 2 tbsp மல்லி தூள்
  • ½ tbsp சீரகத் தூள்
  • 1 ½ கப் தண்ணீர்
  • 1 tbsp கரம் மசாலா
  • 2 tbsp கஸ்தூரி மேத்தி
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு குழம்பு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள் அதன் பின்பு அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி மீன் மேக்கரை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் இறக்கி விடுங்கள்.
  2. அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும், எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து வதக்கவும். பின் இதனுடன் சோம்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு இதனுடன் நிளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலைகளை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இதில் பூண்டு, இஞ்சி மற்றும பச்சை மிளகாய் இந்த மூன்று பொருட்களையும் நன்றாக இடித்து சேர்த்துக் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின் இதனுடன் தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளரி விடவும். பின்பு தக்காளியின் பச்சை வாடை போகும் வரை நனறாக கிளறி விட்டு, அதன் பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் சீரகத்தூள் போன்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  6. பின் இதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி கிரேவியை ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் வேக வைத்த மீன் மேக்கரில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து வெளியேற்றி பின் கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  7. பின்பு கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சிறிது கொத்தமல்லி தூவி கடாயை இறக்கி விடுங்கள் சுவையான செட்டிநாடு மீன் மேக்கர் கிரேவி இனிதே தயார்.