உருளைக்கிழங்கு தக்காளி மசியல் கூட்டு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற கூட்டு!

Summary: கூட்டு, பொறியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு தக்காளி மசியல் கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

Ingredients:

  • 4 உருளைக்கிழக்கு
  • 1 தக்காளி
  • 1 தக்காளி அரைத்தது
  • 2 tbsp எண்ணெய்
  • 1/2 tsp சீரகம்
  • 1 சிட்டிகை வெந்தயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 tbsp இஞ்சு பூண்டு விழுது
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tsp சீரகத்தூள்
  • 2 tsp தனியா தூள்
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • 1/2 tbsp கரம் மசாலா
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் , சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து சிறிது வறுத்து விடுங்கள்.
  2. பின் இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும். பின் இதனுடன் இடித்த பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் நாம் வைத்திருக்கும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், சீரக தூள், சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  4. பின் மசாலா நன்கு வதங்கியதும் இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். பின் இதனுடன் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
  5. அதன் பின் குக்கரை மூடி வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின் குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து கரம் மசாலா மற்றும் சிறிது கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு தக்காளி மசியல் தயார்.