மீன்டும் மீன்டும் சுவைக்க தோன்றும் பன்னீர் பொடிமாஸ் இப்படி செய்து பாருங்க!!

Summary: இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் அருமையான சுவையில் செய்து விடலாம், இதனுடன் சப்பாத்தி சேர்த்துச்சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இந்த பன்னீர் பொடி மாஸை விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லுவார்கள்.

Ingredients:

  • 200 கிராம் பனீர்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 2 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் இஞ்சித் துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பனீர் உதிர்த்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.
  2. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு உதிர்த்து வைத்துள்ள பனீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.
  5. இப்பொழுது சுவையான பனீர் பொடிமாஸ் தயார்.