ருசியான பூண்டு தொக்கு இப்படி செய்து பாருங்க! எப்பொழுதும் சட்னியை செய்வதற்கு இந்த தொக்கு செய்யுங்கள்!

Summary: இட்லி, தோசைக்கு தொட்டுக்க சட்னி என்ன வைப்பது என்று குழப்பமா. இதோ ஒரு சுலபமான முறையில், சுவையான ரோட்டு கடை தொக்கு, இந்த முறையில் வைத்து பாருங்கள். சட்னி என்று சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி தான். இந்த பூண்டு தொக்கு., இட்லி, தோசை, சப்பாத்தி, பழைய சாதம் என அனைத்து உணவோடும் சேர்த்து சாப்பிடலாம். சுவைக்கு சுவை, இந்த தொக்கு செய்வதற்கும் மிக சுலபமானது. இந்த சுவையான ரோட்டு கடை தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்வதற்கான செயல்முறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Ingredients:

  • 1 tsp கடுகு
  • 1 tsp வெந்தயம்
  • 4 tsp நல்லெண்ணெய்
  • 2 பூண்டு
  • 5 தக்காளி
  • 5 தக்காளி
  • கல் உப்பு
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் பேஸ்ட்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp வெள்ளம்
  • கடுகு, வெந்தய பொடி
  • 20 முந்திரிப் பருப்பு

Equipemnts:

  • 1 இடி கல்
  •  மிக்ஸி ஜார்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கடாயில் எண்ணெய் சேர்க்காமல், கடுகு வெந்தயம் சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து எடுக்கவும். வறுத்து எடுத்ததை கல்லில் சேர்த்து நன்கு இடித்து பொடியாக்கி, வேறு கிணற்றில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து, தோல் உரித்து வைத்த பூண்டு சேர்த்து லேசாக வதக்கிய பின், நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து அதோடு அரைத்து வைத்த தக்காளியையும் சேர்க்கவும்.
  3. பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பேஸ்ட் சேர்த்து நன்கு கொதி வந்து, தக்காளி நன்றாக வெந்தபின், மிளகாய்த்தூள், வெள்ளம், ஏற்கனவே இடித்து வைத்திருந்த கடுகு வெந்தய பொடி, முந்திரிப் பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. நன்கு கலந்து விட்ட பின் கடாயை மூடி போட்டு மூடி வைக்கவும். ஒரு பத்து நிமிடம் கழித்து, கடாயை திறந்து பார்த்தால், தொக்கு நன்றாக எண்ணெய் பிரிந்து வந்திருக்கும். கலந்துவிட்டு இறக்கினால் சுவையான ரோட்டு கடை தொக்கு ரெடி.
  5. குறிப்பு : இந்தத் தொக்கில் வெங்காயம் சேர்க்காததால், ஒரு வாரம் கெட்டுப் போகாமல் வைத்து சாப்பிடலாம்.