அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் வருவலை இப்படி வறுத்து கொடுக்கலாம்! இதன் ருசியே தனி!!
Summary: இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மிளகு எலுமிச்சை சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி சுவையான மீன் வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்
Ingredients:
1/2 கிலோ மீன்
2 தேக்கரண்டி சோம்புத் தூள்
2 தேக்கரண்டி மிளகுத்தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
3 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு
கொத்தமல்லி இலை
உப்பு
தேங்காய் எண்ணெய்
Equipemnts:
1 கடாய்
Steps:
மிளகுத்தூள், சோம்புத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
மீன் துண்டுகளை எடுத்து கலவையை அவற்றில் கோட் செய்து 30நிமிடம் ஊற விட்டவும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான மிளகு எலுமிச்சை மீன் வறுவல் தயார்.