காரசாரமான ஆந்திரா இறால் குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!!

Summary: பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவை சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இறால் பிரியர் என்றால் இந்த வார கடைசியில் இறாலைக் கொண்டு ஆந்திரா ஸ்டைல் குழம்பு இப்படி செய்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். ஏனென்றால் இந்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும்.மேலும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இந்த குழம்பு செய்வதும் கஷ்டம் இல்லை. குறைவான நேரத்திலும், சுலபமாகவும், ருசியாகவும் வீட்டிலே செய்து விடலாம்.இந்த குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

Ingredients:

  • ½ கிலோ சுத்தம் செய்த இறால்
  • 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • ¼ கிலோ வெங்காயம்
  • ¼ கிலோ தக்காளி
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 3 காய்ந்த மிளகாய்
  • ½ மூடி தேங்காய்
  • புளி
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் தேங்காய் அரைத்து கொள்ளவும், காய்ந்த மிளகாயில் விதைகளை நீக்கிக்கொள்ளவும், புளி கரைத்துக்கொள்ளவும்.
  2. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  4. அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கிக்கொள்ளவும்.
  5. பின் அதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும்.
  6. பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
  7. நன்கு கொதித்து வந்தவுடன், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.