பொரிச்ச குழம்பு இப்படி செய்து சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க! அஹா என்ன ருசி என்ன ருசி!

Summary: பொரிச்சகுழம்பு புளி இல்லாமல் , மிளகு, ஜீரகம் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகை. புடலங்காய் , அவரைக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களில் செய்தால் மிக ருசியாக இருக்கும். இந்த குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள புளிப்பாக நெல்லிக்காய் தயிர் பச்சடி அல்லது புளியிட்ட கீரை செய்வது வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு இந்த குழம்பையும் சேர்த்து சாபிட்டால் அமிர்தமாக இருக்கும்….

Ingredients:

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 உருளைக்கிழங்கு
  • 2 முருகைக்காய்
  • குழம்பு மிளகாய் தூள்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கவும், வதங்கியதும் நறுக்கிய உருளைகிழங்கு, முருகைக்காய், சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
  3. முருகைக்காய், உருளைக்கிழங்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.