கிராமத்து மணம் மாறாமல் மொச்சை கத்திரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! மீண்டும் வைக்க தோன்றும் சுவையில்!

Summary: இந்த மொச்சை கத்தரிக்காய் குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • ½ கப் மொச்சை
  • 6 கத்திரிக்காய் பிஞ்சாக
  • 7 பல் பூண்டு
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தக்காளி
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 மேஜைக்கரண்டி புளிச்சாறு
  • 2½ ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1½ மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • ¼ ஸ்பூன் வெந்தயம்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் மொச்சையை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
  2. கத்திரிக்காயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
  3. அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  4. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. பின்னர் வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் போது தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.
  7. அடுத்து அதில் புளிசாறு, மிளகாய்தூள், மற்றும் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. கத்திரிக்காய் வெந்ததும், வேக வைத்த மொச்சையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  9. குழம்பு கெட்டியானதும் இறக்கினால் சுவையான மொச்சைக் கத்திரிக்காய் குழம்பு தயார்.