ஆந்திரா கார ருசியான தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: எப்பொழுதும் ஒரே மாரி தோசை செய்யாமல், இது போன்று ஆந்திரா ஸ்டைல் கார தோசை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசான சுவையில் இருக்கும். இந்த தோசை செய்து தேங்காய் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் அற்புதம். காரம் விரும்புவோருக்கு இது போன்று செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 10 வர மிளகாய்
  • 1 முழு பூண்டு
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 முட்டை
  • 1 கப் தோசை மாவு

Equipemnts:

  • தோசைக்கல்

Steps:

  1. முதலில் கொதிக்கும் நீரில் வர மிளகாயை 5 நிமிடம் உறவிக்கவும். பூண்டுகளை தோலுரித்து வைக்கவும்.
  2. பின்னர் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு தோசைக்கல்லில் மாவு எடுத்து வட்டமாக தோசைபோல் ஊற்றி அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றவும். அத்துடன் சுற்றிலும் எண்ணெய் விடவும்.
  4. அரை பதமாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள கார சட்னியை 2 டீஸ்பூன் தோசை மேல் போட்டு தேய்த்து விடவும்.
  5. இருபக்கமும் வேக விட்டு பரிமாறவும்.