ருசியான செட்டிநாடு பால் பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரும் சுவையான பால் பணியாரம் செய்ய…! நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் பால் பணியாரம் ஒன்று. நிறையப் பேருக்கு பால் பணியாரம் ரொம்பவும் பிடிக்கும். வீட்டில் செய்தால் ஆசை தீர சாப்பிடலாம் . சமையலில் இப்போதுதான் காலை எடுத்து வைப்பவர்கள், இந்த பால் பணியாரம் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செய்யலாம், . கட்டாயம் சரியான பக்குவத்தில் வரும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த பாரம்பரிய பால் பணியாரம்,ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பால் பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ cup பச்சரிசி
  • ½ cup உளுந்து
  • 1 cup தேங்காய் பால்
  • 1 cup பால்
  • ½ tsp ஏலக்காய்
  • சர்க்கரை தேவையான அளவு
  • தேவையான அளவு தண்ணீர்
  • உப்பு சிறிதளவு

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 வாணலி

Steps:

  1. பால் பணியாரம் செய்ய முதலில் உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  2. (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
  3. அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விடவும்.
  4. நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பணியாரத்தை எடுத்து, அதில் தயார்செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் ஊற வைத்து சேர்த்து பரிமாறவும்.