சுட சுட சோறுடன் சாப்பிட காளிஃப்ளவர் எக் பொரியல் இப்படி செய்து பாருங்க!

Summary: உங்களுக்கு காளிஃப்ளவர் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. காளிஃப்ளவர் முட்டை பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த பொரியல் செய்து ரசம், சாம்பார், வெரைட்டி ரைஸ் வுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 காளிஃப்ளவர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 2 முட்டை
  • உப்பு
  • எண்ணெய்
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ½ டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • 2 வரமிளகாய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் காளிஃப்ளவரை நறுக்கி சுத்தம் செய்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
  3. அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி தக்காளி குழைந்த்தும் அத்துடன் காளிஃப்ளவரை போட்டு பிரட்டவும். பின் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
  5. 5 நிமிடம் கழித்து 2 முட்டைகளை உடைத்து ஊற்றி பிரட்டி விட்டு, வெந்ததும் இறக்கவும்.
  6. சுவையான காளிஃப்ளவர் முட்டை பொரியல் தயார்.