ருசியான கேரளா பனங்கிழங்கு கார புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Summary: புட்டு கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று. புட்டு வழக்கமாக வாழைப்பழம், அப்பளம் அல்லது கடலை கறியுடன் பரிமாறப்படுகிறது. வீட்டில் புட்டு செய்வது மிகவும் எளிதானது. பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க பனங்கிழங்கு புட்டு செய்து கொடுங்கள்.

Ingredients:

  • 6 பனங்கிழங்கு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 6 பல் பூண்டு
  • 4 வர மிளகாய்
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் கிழங்கை நார் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  2. பனங்கிழங்கு இன்னும் கொஞ்சம் காய்ந்ததாக இருந்தால் புட்டு நன்கு உதிரியாக இருக்கும்.
  3. பின் நறுக்கிய துண்டுகளுடன் சீரகம், மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பின் இந்த அரைத்த கிழங்கை புட்டாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
  5. ஒரு 5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் மிகவும் சுவையான பனங்கிழங்கு கார புட்டு தயார்.
  6. இது காபியுடன் அல்லது சாதத்திற்கு கூட்டாக பூண்டு குழம்பு போன்ற மசாலா குழம்புகளுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.