காரசாரமான ருசியில் ஆந்திரா மாங்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான். மாங்காய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அது மாங்காயின் குணம்.”மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். இவ்வகையில் சுவையான மாங்காய் தொக்கு இன்று காண்போம். சுவையான மாங்காய் தொக்கு என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாங்காய் தொக்கு என்பது நிறைய பேருக்கு பிடிக்கக்கூடிய உணவு ஆகும்.

Ingredients:

  • 4 மாங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 4 காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • உப்பு
  • 1/2 கப் கடலை எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Steps:

  1. மாங்காயை தோலுடன் அல்லது தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுக்கவும். பின் அதனுடன் கடுகு சேர்த்து வறுத்து வெடித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் துருவிய மாங்காய் சேர்த்து வேக வைக்கவும்.
  4. பின் மஞ்சள் தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் அரைத்த பொடி சேர்த்து கலந்து விடவும்.
  5. எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறவும். பின் அடுப்பை அனைத்து ஆறவிட்டு வேறு பாத்திரத்திற்கு மாற்றி சாப்பிடலாம்.
  6. அவ்வளவுதான் புளிப்பும், இனிப்பும், காரமுமான மாங்காய் தொக்கு ரெடி.