கிராமத்து ருசியான விரால் மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Summary: அசைவத்தில் அனைவருக்கும் பிடித்தது மீன் இந்த மீன வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் காரசார சுவை மிகுந்த ஒரு உணவாகும் இதனை சுவையாக செய்யலாம் மீனை வைத்து மீன் கொத்து செய்யலாம் மீன் புட்டு செய்யலாம் மீன் குழம்பு செய்து அனைவரும் ருசியாக மனம் மாற உண்ணலாம் .ஈசியாகசெய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான விரால் மீன் குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். .

Ingredients:

  • 5 துண்டுகள் விரால் மீன்
  • ½ tsp கடுகு
  • ¼ tsp வெந்தயம்
  • 7 பூண்டு
  • 12 சின்ன வெங்காயம்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • கருவேப்பிலை சிறிது
  • நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. விரால் மீன் குழம்பு செய்யமுதலில் நமக்கு பிடித்த மீனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. பின்னர் மண்பானை அல்லது சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் வெந்தயம் போட்டு பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். பூண்டு சேர்க்க வேண்டும்.
  3. பின் வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.கரைத்து வைத்துள்ள புள்ளியை புளி தண்ணீரை சேர்க்க வேண்டும்.
  4. அதன் பின் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். நன்றாக கொதி வந்ததும் தண்ணீர் கொஞ்சம் வற்றியவுடன் மீன் துண்டுகளை சேர்க்க வேண்டும்.
  5. ஏனென்றால் மீன் துண்டுகளை முதலில் சேர்த்தால் மீன் துண்டுகள் உடைந்து விடும். அதனால் தான் தண்ணீர் வற்றியவுடன் மீனை சேர்க்க வேண்டும்.
  6. பின் ஒரு பத்து நிமிடம் குழம்பு நன்றாக கொதிக்க விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான மீன் குழம்பு தயார்.