அடிக்கிற வெயிலுக்கு டீ பிரியர்கள் மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

Summary: டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது.சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால் இன்று நாம் சுவையாகவும், மணமாகவும் இருக்கும் மசாலா டீ பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த மசாலா டீயை நீங்கள் உங்கள் வீட்டில் போட்டு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் அடுத்த முறையும் உங்களை இதையே அடிக்கடி போட சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 tbsp கிராம்பு
  • ½ அளவு ஜாதிக்காய்
  • 2 பட்டை
  • 25 கிராம் சுக்கு
  • 1 tbsp ஏலக்காய்
  • 1 tbsp மிளகு
  • 2 டம்பளர் தண்ணீர்
  • 1 tbsp பொடி செய்த மசாலா
  • 4 டீ தூள்
  • 5 tbsp சர்க்கரை
  • 2 டம்பளர் பால்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 டீ பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு டீஸ்பூன் கிராம்பு, இரண்டு பட்டை, பாதி அளவு ஜாதிக்காய், ஒரு டீஸ்பூன் ஏலக்காய், ஒரு டீஸ்பூன் மிளகு இந்த பொருட்களை எல்லாம் ஒரு கடாயில் சேர்த்து கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு நாம் வறுத்த பொருட்களுடன் 25 கிராம் அளவு சுக்கு சேர்த்து ஒரு உரலில் சேர்த்து நன்றாக தட்டி அதன்பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு டீ பாத்திதரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, நான்கு டீஸ்பூன் அளவு டீ தூள் மற்றும் நாம் வறுத்து பொடி செய்த மசாலாவில் ஒரு டீஸ்பூன் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  4. பின் தண்ணீர் நன்றாக கொதித்து வரும் பொழுது ஐந்து டீஸ்பூன் அளவு சர்க்கரை மற்றும் இரண்டு டம்ளர் அளவு பால் சேர்த்து கொதிக்க விட்டு கொள்ளுங்கள்.
  5. பின் டீ நன்றாக கொதித்து வரும் பொழுது தீயை குறைத்து வைத்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். பின்பு டீ யை வடிகட்டி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாற கொடுங்கள் அவ்வளவு தான் சுவையான மசாலா டீ தயாராகிவிட்டது.