ருசியான நெத்தலி மீ‌ன் அவியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: நெத்தலி மீ‌ன் அவியல், இது ஒரு பாரம்பரியமான சமையல். நெத்தலி மீ‌ன் அவியல் செ‌ய்வது எ‌ளிது. இது‌ மிகவு‌ம் ரு‌சியாக இரு‌க்கு‌ம். வாங்க நாமும் இந்த வித்தியாசமான நெத்தலி மீ‌ன் அவியல் கற்றுக் கொள்வோம்.

Ingredients:

  • 1/4 ‌கிலோ நெத்தலி மீன்
  • 1 தே‌க்கர‌ண்டி சமையல் எண்ணைய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 தே‌க்கர‌ண்டி மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை
  • பு‌ளி
  • இஞ்சி
  • உ‌ப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. துருவிய தேங்காயுடன் சிறிதாக வெட்டிய வெங்காயம், நசு‌க்‌கிய இஞ்சி,மஞ்சள் துள், பச்சை மிளகாய், உப்பு சே‌ர்‌த்துபிசையவும்.
  2. இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாத்திரம் ஒன்றில் வேக வைக்கவும். அதனுள் சுத்தம் செய்யப்பட்ட மீனையும், கறிவேப்பிலையும் இட்டு நன்றாக அவிய விடவும்.
  3. ஈரப்பத‌ம் போகும் வரைநன்றாக கிளறி விட்டுக் கொண்டு இருக்கவும் . பின்னர் சிறிதளவு எண்ணைய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி விடவும்.
  4. வறுவல் நன்கு பொன்னிறமாக வந்த பின்னர் சிறிதளவு புளி விட்டு இறக்கவும இருபதே நிமிடங்களில் சுவையான நெத்தலி மீன் அவியல் தயா‌ர்.