சுவையான கார சட்னி செய்வது!

Summary: கார சட்னி இட்லி,தோசை போன்ற காலை மற்றும் இரவு உணவுகளுக்கு பொருத்தமாகவும் சுவையாகவும் இருக்கும்.

Ingredients:

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 4 to 5 சிவப்பு மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • புளி
  • கொத்தமல்லி இலை
  • 2 பெரியவெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ¼ கடுகு
  • 2 சிவப்பு மிளகாய்
  • கருவேப்பிலை

Steps:

  1. ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறம் மாறும் வரை வதக்கவும்.
  2. பின்பு 5 சிவப்பு மிளகாய், 2 நறுக்கிய பெரியவெங்காயம், சேர்த்து வெங்காயம் வேகுறதுக்கு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பிறகு அதில் பூண்டு,மற்றும் புளி சேர்த்து வெங்காயம் நல்லா வெந்தபிறகு 2 நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கிய பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.
  5. சிறிது நேரம் ஆறவிடவும். சூடரானதும் மிக்சியில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  6. ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து என்னை சூடானதும் ¼ டேபிள் ஸ்பூன் கடுகு, 2 சிவப்பு மிளகாய்,கருவேய்ப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
  7. பின்பு தாளித்ததை அரைத்த சட்னியில் சேர்த்து கலந்துவிடவும்.
  8. இப்பொழுது சுவையான கார சட்னி தயார்.