சுட சுட ருசியான வேர்க்கடலை சாதம் இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு பக்காவா இருக்கும்!!

Summary: நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட சமையல் சுவையாகவும், சத்துக்கள் மிகுந்ததாக இருந்தால், அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சத்தான சுவையான சாதம் தான் வேர்க்கடலை சாதம். வேர்க்கடலையில் பல சத்துக்கள் உள்ளன.

Ingredients:

  • 3 கப் வடித்த சாதம்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4 கப் வேர்க்கடலை
  • 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 டீஸ்பூன் வெள்ளை எள்
  • 3 காஷ்மீர் மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் நெய்
  • 3 டீஸ்பூன் கடலை எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 2 வர மிளகாய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வடித்த சாதம் ஒட்டாமலிருக்க எண்ணெய் சேர்த்து கிளறி ஆற வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து 1ஸ்பூன் எண்ணெய் விட்டு வேர்க்கடலை சேர்த்து லேசாக வறுத்து பின் உளுந்து சேர்த்து வறுக்கவும்.
  3. அது லேசாக வறுபட்டதும், பின் எள் சேர்த்து லேசாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய் சேர்த்து லேசாக சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.
  4. பின்னர் வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொர கொரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பின்னர் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.பின் வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.
  6. பின் ஆற வைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். நன்றாக கிளறியதும் அரைத்து வைத்த வேர்க்கடலை விழுது சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான, சத்தான வேர்கடலை சாதம் ரெடி. இதற்கு வெறும் தயிரில் உப்பு மற்றும் நறுக்கிய வெள்ளரி சேர்த்து கொடுத்தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.