கேரளா ஸ்டைல் ருசியான மினி அதிரசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!

Summary: மினி அதிரசம் உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் மினி அதிரசம் பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம். ஒரு கப் அரிசி மாவு இருந்தாலே சட்டுனு அசத்தலாக சுவையான மொறு மொறு இனிப்பு மினி அதிரசம் ரெசிபி இப்படியும் செய்யலாமே!ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மினி அதிரசம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 3 cup அரிசி மாவு
  • 2 cup கருப்பட்டி
  • 1 cup தண்ணீர்
  • 5 cup எண்ணெய்
  • 3 ஏலக்காய்

Equipemnts:

  • 1 வாணலி
  • 1 கரண்டி

Steps:

  1. மினி அதிரசம் செய்ய முதலில், ஒரு பானையில் கருப்பட்டி, ஏலக்காய் மற்றும் தண்ணீரை ஒன்றாக சேர்த்து காய்ச்சவும்.
  2. காய்ச்சிய கருப்பட்டியை சுட சுட அரிசி மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும். நன்றாக பிசைந்து 2 நாட்கள் மூடிவைக்கவும்.
  3. 2 நாட்கள் கழித்து தேவைபட்டால் இன்னும் கொஞ்சம் சுடு தண்ணீர் சேர்த்து மறுபடியும் பிசைந்து கொள்ளவும்.
  4. ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளில் கொஞ்சம் அரிசி மாவு தடவி பிசைந்த மாவை அதில் வைத்து கால் அங்குல அளவிற்கு தேய்க்கவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு தோய்த்த மாவை மெது வடைக்கு பாேல் நடுவில் ஓட்டை பாேட்டுபொரித்து எடுக்கவும்