ருசியான மாலை நேர ஸ்நாக்ஸாக பட்டாணி சமோசா இப்படி செய்து பாருங்க!

Summary: நாம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் வடையும் ஒன்று அதிலும் குறிப்பாக சமோசா என்றால் சிலருக்கு அலாதி பிரியம் அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக பட்டாணி சமோசா அதிலும் மேலும் பல் சுவை உண்டு இருக்கும் இதனை நாம் எந்த நேரம் ஆனாலும் சாப்பிடலாம் அனைத்து வேலைகளிலும் மிகவும் சிறப்பான சைடு டிஷ் ஆக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாணி சமோசா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 cup மைதா
  • 1 cup கோதுமை மாவு
  • 3 tbsp ரவை
  • 3 வெங்காயம்
  • ½ cup மஞ்சள் பட்டாணி
  • ½ tsp மிளகாய் தூள்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. வெங்காய சமோசா செய்ய முதலில் மஞ்சள் பட்டாணி 5மணி நேரம் ஊற வைக்க வேண்டும். குக்கரில் ஊற வைத்த பட்டாணியை 7விசில் கொடுத்து வைக்க வேண்டும்.
  2. முதலில் மைதா மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.1மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
  3. பிறகு மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவு போல் உருட்டி கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் உருட்டிய சப்பாத்தியை போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. உருட்டிய மாவை சப்பாத்தி போன்று அல்லாமல் லைட் ஆக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  5. இப்பொழுது சமோசா ஷீட் தயார் செய்ய வேண்டும். தோசை கல்லில் போட்டு பிரட்டி எடுத்த சப்பாத்தி ஷீட்டை செவ்வகம் வடிவில் இரு பிரிவுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்போது சமோசா ஷீட் தயார்.
  6. அதன் பின்னர் சமோசா உள்ளே வைக்கின்ற வெங்காய கலவையை தயார் செய்ய வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.
  7. வெங்காயம் ரொம்பவும் வதங்க கூடாது. அதனுள் வேக வைத்த பட்டாணி,மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  8. பிறகு மைதா, சிறிதளவு தண்ணீர் கலந்து மைதா பேஸ்டை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
  9. அதனை கலவை ஆறிய பின் சமோசா சீட்டை மடித்து இந்த கலவையை சீட்டினுள் வைத்து பின் மைதா பேஸ்டை தடவி மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
  10. பின்பு அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்திருக்கின்ற சமோசாவை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான வெங்காய சமோசா தயார்.