காரைக்குடி கத்தரிக்காய் மசாலா குழம்பு இப்படி செய்து பாருங்கள்!இதன் ருசியே தனி!!

Summary: வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்தரிக்காய் மசாலா குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 5 கத்தரிக்காய்
  • 1 tbsp கருப்பு கடலை
  • 1 வெங்காயம்
  • 1 சாம்பார் வெங்காயம்
  • 10 கறிவேப்பிலை
  • 2 தக்காளி
  • 1 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • 1 tbsp  கரம் மசாலாத்தூள்
  • புளி
  • தேவையான அளவு உப்பு
  • 1 tsp கடுகு
  • 10 கறிவேப்பிலை
  • 1 சாம்பார் வெங்காயம்
  • 2 tbsp கடலை எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. கத்தரிக்காய் மசாலா குழம்பு செய்ய முதலில் கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து, முளைக்க வைத்து எடுத்து தயாராக வைக்கவும்.வெங்காயம்,தக்காளியை நறுக்கி,கறிவேப்பிலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து, கல் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அத்துடன் மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியா தூள்,கரம் மசாலாத்தூள், புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.அத்துடன் தேங்காய் துண்டுகள் சேர்த்து, சூடாரியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் கலந்து அரைக்கவும்.
  4. குக்கரை ஸ்டவ்வில் வைத்து கடலையை சேர்த்து, அரைத்த மசாலா விழுதை சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
  5. கத்தரிக்காயை நீள வாக்கில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து,நல்லெண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து வதக்கவும்.பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும்.பின்னர் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  6. கத்தரிக்காய் மசாலாவுடன், வேக வைத்து வைத்துள்ள கடலை மசாலாவை சேர்த்து,கொஞ்சமாக தண்ணீர் கலந்து வேக வைக்கவும்.
  7. ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கி, தாளிப்பு கொடுத்து இறக்கினால் குழம்பு தயார்.
  8. தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான, சத்தான முளைக்கட்டிய கருப்பு கொண்டை கடலை, கத்தரிக்காய் மசாலா குழம்பு சுவைக்கத்தயார்.
  9. முளைக்கட்டிய கருப்பு கடலை, கத்தரிக்காய் மசாலா குழம்பு சாதம்,தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.