பிரியாணி சுவையில் ருசியான கிராமத்து தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Summary: கிராமத்து தக்காளி சாதத்தை இந்த முறையில் நீங்கள் செய்து சாப்பிடும்போது உங்களுக்கு பிரியாணி சாப்பிடும் மாதிரியான எண்ணம் வரும் அந்த அளவிற்கு சுவையில் பட்டைய கிளப்பும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இது இருக்கும். நீங்கள் ஒரு முறை இந்த கிராமத்து தக்காளி சாதத்தை செய்து சாப்பிட்டு பார்த்தால் பின் அடிக்கடி நீங்களே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். ஆகையால் இன்று இந்த கிராமத்து தக்காளி சாதத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 3 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp சோம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • உப்பு
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 tbsp நெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், பின் எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக தாளியுங்கள்.
  2. இந்த பொருட்கள் நன்றாக சிவந்து வந்ததும் பின் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து வதக்குங்கள், பின் இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி மற்றும் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாடை போகி வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி அதன் பின்பு கீரிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற மசாலா பொருட்களை சேர்த்து பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  4. பின் மசாலா பொருட்கள் வெங்காயத்துடன் நன்கு வதங்கியதும் பின் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பின் கடாயை மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து சிறிது கிளறி விட்டு மறுபடியும் மூடி விடுங்கள்.
  5. பின் மூடியை திறந்து தக்காளியை சிறிது மசித்து விட்டு எண்ணெயும் வெங்காயமும் தனியா பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து கடாய் இறக்கி விடுங்கள். பின்பு இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  6. அவ்வளவுதான் தக்காளி தொக்கு தயார் இனி நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் சாதத்துடன் சிறிது சிறிதாக இந்த தக்காளி தொக்கை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள், அவ்வளவுதான் சுவையான தக்காளி சாதம் இனிதே தயாராகி விட்டது.