காலை உணவுக்கு நெல்லிக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட சமையல் சுவையாகவும், சத்துக்கள் மிகுந்ததாக இருந்தால், அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சத்தான சுவையான சாதம் தான் நெல்லிக்காய் சாதம். நெல்லிக்காயில் பல சத்துக்கள் உள்ளன.

Ingredients:

  • 1 கப் அரிசி
  • 1/2 கப் சின்ன நெல்லிக்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பெரிய
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை
  • 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்1
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. சின்ன நெல்லிக்காயை நன்கு கழுவி, கொட்டை நீக்கி விட்டு, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. சாதம் உதிரியாக வடித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்கடலை, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின்னர் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் விழுதை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அதன் பின் உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலந்து விடவும். இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் கலந்து இறக்கினால் நெல்லிக்காய் விழுது சாதம் தயார்.
  6. தயாரான நெல்லிக்காய் விழுது சாதத்தை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.