கிராமத்து ஸ்டைல் ருசியான நாட்டு கோழி குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Summary: நாட்டு கோழி குழம்பு என்பது நாட்டு கோழி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட காரமான குழம்பு ஆகும், இது சூடான சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறப்படுகிறது. நாட்டுக் கோழியில் உள்ள எலும்புகள் இந்தக் கறிக்கு கூடுதல் சுவையைத் தருகின்றன. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாட்டுக் கோழி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • நாட்டுக் கோழி
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • தேங்காய் பால்
  • மஞ்சள் தூள்
  • மசாலா தூள்
  • மிளகாய் தூள்
  • மல்லி தூள்
  • சோம்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி தழை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. நாட்டுக் கோழி குழம்பு செய்ய முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். பின்பு தக்காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. வதக்கிய பின்பு அவற்றை ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நன்கு அரைத்துக் கொள்ளவும்.பின்பு நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சிறிய துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின்பு மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதக்கிய பின்பு சிறிய துண்டாக வெட்டி வைத்த கோழியை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 
  6. சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து கிளறவும். பின்பு அதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும்.
  7. நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும். விசில் இறங்கின பிறகு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும். காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு தயார்.