கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Summary: மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும் பஜ்ஜி சொல்லவா வேண்டும் பஜ்ஜியை பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா நாம் வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவோம் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு இது போன்ற பல்வேறு வகையான பேச்சு சாப்டு இருப்போம் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் நேந்திரம் பழம் பஜ்ஜி ஒருமுறை சாப்பிட்டு பாருங்க சுவையோ அமோகமாக இருக்கும்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேந்திரம் பழம் பஜ்ஜி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.

Ingredients:

  • 3 நேந்திரம் வாழைப்பழம்
  • 2 cup கடலை மாவு
  • 1 tbsp அரிசி மாவு
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ¼ tsp சோடா உப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • தண்ணீர்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய கண் கரண்டி

Steps:

  1. நேந்திரம் பழம் பஜ்ஜி செய்ய முதலில் வாழைக்காயை தோல் சீவி நீளமாக சீவி கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  2. அவற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூட வைக்க வேண்டும்.
  3. பின்னர் சீவி வைத்திருக்கின்ற வாழைக்காயை ஒவ்வொன்றாக எடுத்து கலவையில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் வாழைக்காய் பஜ்ஜி ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டுக் கொள்ள வேண்டும்.
  4. பின் பஜ்ஜி வெந்ததும் எண்ணெயை வடிகட்டி ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சூடான வாழைக்காய் பஜ்ஜி தயார்.