சுட சுட சோறுடன் சாப்பிட வெண்டைக்காய் தக்காளி பச்சடி இப்படி செய்து பாருங்க!!

Summary: நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று ஆகும். ஏனென்றால் உடலுக்கு தேவையான பல சத்துகளை இவை தான் வழங்குகின்றன. இவற்றில் தினம் ஒரு வகை காய்கறியை நாம் நமது உணவுகளில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. அந்த வகையில் வெண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுவில் சேர்த்துக்கொள்வதால் நமக்கு ஏகப்பட்ட பயன்கள் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த தக்காளி வெண்டைக்காய் பச்சடி.

Ingredients:

  • 200 கிராம் வெண்டைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • புளி
  • 2 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் எண்ணெய்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • உப்பு

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

Steps:

  1. முதலில் வெண்டைக்காய், வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு மிக்ஸியில் தேங்காயை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, மஞ்சள்தூள் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி நன்றாக வதங்கி வரும்பொழுது அத்துடன் வெட்டி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
  7. வெண்டைக்காயின் வழு வழுப்பு போயி காய் நன்றாக வெந்து வதங்கி வந்ததும் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தட்டு வைத்து மூடி கொதிக்க விடவும்.
  8. எல்லாம் நன்கு கொதித்து கலந்து சேர்ந்து வரும்பொழுது அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து லேசாக சூடானதும் கொத்தமல்லி, கருவேப்பிலை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  9. சுவையான நெல்லை ஸ்பெஷல் வெண்டைக்காய் தக்காளி பச்சடி தயார். சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.