காரசாரமான ருசியில் சிக்கன் லெக் ப்ரை இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீணடும் சுவைக்க தூண்டும்!!

Summary: சிக்கன் லெக் ப்ரை இனி இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கிலோ சிக்கன் லெக்
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ¼ கப் தயிர்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 3 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு
  • கலர் பொடி
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் கோழிக்கால்களை சுத்தம் செய்து அதனை ஒரு பௌலில் போட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிரட்டவும். அதனை ½ மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லெக் பீஸ் கலை போட்டு பொரித்து எடுக்கவும்.
  3. தயிர் சேர்ப்பதால் எண்ணெயில் போட்டவுடன் மசாலா ஒட்டும் அதனால் போட்ட சிறிது நேரத்தில் திருப்பி விடவும்.