தாருமாறான ரூசியில் ரவா பொங்கல் செய்வது எப்படி ?

Summary: இப்படி ஒரு தடவை நீங்கள் ரவா பொங்கல் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் உங்களை அடிக்கடி இதுபோல் செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காலை உணவாக இந்த ரவா பொங்கல் மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் நாம் சமைக்கும் இந்த ரவா பொங்கலில் அதிக அளவு காய்கறி சேர்த்து சமைப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் ஒரு மாறுதலாக இந்த உணவை வாரம் ஓரு முறை நீங்கள் செய்து சாப்பிடலாம். இன்று இந்த சுவையான ரவா பொங்கல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Ingredients:

  • 1 சிட்டிகை உப்பு
  • 1 கப் ரவா
  • ½ கப் பாசி பருப்பு
  • 2 tbsp நெய்
  • 15 முந்திரி
  • 2 மிளகு
  • 1 tbsp சீரகம்
  • 2 tbsp இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் குக்கரை அதில் தேவையான அளவு பாசிப்பயறு இரண்டு முறை தண்ணீரில் அலசி கொண்டு அதன் பின் குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து மூன்று விசில் வரை வரும்வரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றிக் கொள்ளவும், பின் நெய் நன்றாக உருகி காய்ந்ததும் முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்து வறுக்கவும்.
  3. முந்திரி நன்றாக பொன்னிறமாக வந்தவுடன் மிளகு சீரகம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலை போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. நாம் சேர்த்த பொருட்கள் எல்லாம் நன்றாக வதங்கியதும் இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் ரவையையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள் மிதமான தீயிலேயே ரவையை வறுக்கவும்.
  5. பின்பு நாம் குக்கரில் வைத்த பாசிப்பருப்பு மூன்று விசில் வந்ததும் அதன் முடியை திறந்து பருப்பை நன்றாக மசித்து விடுங்கள் அதன் பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டு குக்கரை அடுப்பில் வைக்கவும்.
  6. தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் நாம் வறுத்த ரவாவை குக்கரில் சேர்த்துக்கொண்டே கலக்கவும் ரவா கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொண்டு கிளறி விடுங்கள் இப்படியே ஒரு ஒரு நிமிடம் கிளறிக் கொண்டே இருந்தால் வெண்பொங்கல் தயாராகிவிடும்.
  7. மேலும் இதில் சிறிது நெய் சேர்த்து நன்றாக கிளறி விடவும் அதன் பின் மறுபடியும் சிறிது நேரம் சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும் அவ்வளவுதான் சுவையான ரவா பொங்கல் தயாராகிவிட்டது.