ருசியான கொத்தவரங்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! சில குழம்பை மட்டும் அடிக்கடி செய்யாமல் இதை செய்து பாருங்க!

Summary: கொத்தவரங்காய் பெரும்பாலும் கூட்டு செய்து சாப்பிடுவோம். கொத்தவரங்காய் சம்பாரில் சேர்ப்போம். கொத்தவரங்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் குழம்பு செய்யும்போது, கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் அடிக்கடி கேட்டு வாங்கி கூட சாப்பிடுவார்கள். இந்த பதிவில் கொத்தவரங்காய் மட்டும் வைத்து எப்படி சுலபமாக குழம்பு செய்வது எப்படி என்றும் , என்ன செய்முறைகள், தேவையான பொருட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Ingredients:

  • 2 கப் கொத்தவரங்காய்
  • 1/2 tsp பெருங்காயம்
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 2 tsp எண்ணெய்
  • 1/2 tsp கடுகு
  • 1/2 tsp சீரகம்
  • 1/2 tsp வெந்தயம்
  • 1/2 tsp பெருங்காயம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • கருவேப்பிலை
  • 2 தக்காளி
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp தனியா தூள்
  • புளி
  • 1/4 கப் தேங்காய்
  • 5 பல் பூண்டு
  • 1 tsp சீரகம்
  • தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி ஜார்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுல்

Steps:

  1. முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். அதில் நறுக்கி வைத்த கொத்தவரங்காய் சேர்த்து, அதோடு பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக கொத்தவரங்காயை வேகவைக்கவும்.
  2. கடாயில் என்னை சேர்த்து, என்னை சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கூடவே நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின்னர் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி நன்கு வதங்கியதும் அதோடு வேகவைத்த கொத்தவரங்காயை சேர்க்கவும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு வதக்கி விட்டு அதோடு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  4. கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த உடன், அரைத்து வைத்த தேங்காய் கரைசலை சேர்த்து, அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்துநன்கு கொதிக்க விடவும். சுவையான கொத்தவரங்காய் குழம்பு தயார்.