ருசியான நண்டு சதை வறுவல் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: நண்டு சதை வறுவல், இதை செய்வதற்கு மிகக் குறைவான நேரமே ஆகும்.. இதை  மதிய உணவில் சாப்பிடலாம். ஒருமுறை சாப்பிட்டால், அதன் ருசி அடிக்கடி கேட்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நண்டு சதை வறுவல் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

Ingredients:

  • 1/2 கிலோ நண்டு
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேக்கரண்டி மிளகுத்தூள்
  • தேக்கரண்டி சோம்புத்தூள்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் தாளித்து இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி சேர்ந்துவதக்கவும்.
  2. அதில் சுத்தம் செய்த நண்டினை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு – மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
  3. வெந்த நண்டினை தனியாக எடுத்து, ஓடினை உடைத்து சதைப் பகுதியை தனியாக எடுத்து வைக்கவும். (வேக வைத்தநீரை சூப்பாக உபயோகிக்கலாம்.)
  4. பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானும் கறிபேப்பிலை தாளித்து பின் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டுசேர்த்து நன்றாக வதக்கி, நண்டு சதைகளை சேர்த்து பிரட்டவும்.
  5. அதில் மிளகுத்தூள்,சோம்புத்தூள் – உப்பு சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான நண்டு சதை வறுவல் தயார்