செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: இனிப்பு பணியாரம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த இனிப்பு பணியாரம். ஆனால் இப்பொழுதெல்லாம் பணியாரம் செய்வதற்கே நேரம் கிடைக்காமல் சிலரும் எப்படி செய்வதென்று மறந்து விட்டார்கள். இனி கவலை வேண்டாம் மிக சுலபமாக இந்த செட்டிநாடு ஸ்பெசல் இனிப்பு பணியாரம் நம் வீட்டிலே செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மாலை ஸ்னாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் இட்லி அரிசி
  • ½ கப் உருட்டு உளுத்தம் பருப்பு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • 3 சிறிய கரண்டி வெல்ல பாகு
  • 3 டேபிள் ஸ்பூன் ரவை
  • துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி

Equipemnts:

  • பணியார சட்டி

Steps:

  1. முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், இந்த நான்கு பொருட்களையும் 3 இருந்து 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
  2. ஊறியது இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது போல் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவேண்டும்.
  3. பிறகு அதில் பாதி மாவு தனியாக எடுத்து வெல்ல பாகு 3 கரண்டி சேர்த்து கலந்து அத்துடன் ரவை சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.
  4. மாவு கெட்டியாகவும் இருக்காமல் தண்ணீராகவும் இருக்கக்கூடாது.
  5. பிறகு பணியார சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி விடவும். மிதமான தீயில் மொறு மொறுனு வெந்ததும் பரிமாறவும்.
  6. இப்பொழுது சுவையான இனிப்பு பணியாரம் தயார்.