மதிய உணவுக்கு சுட சுட கொத்தமல்லி சாதம் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: மதிய உணவாக குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபிதான் இன்று பார்க்க போகிறோம். கொத்தமல்லி சாதம் மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.இந்த சாதத்தை செய்வதும் சுலபம் தான், குறைந்த நேரத்தில் அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. மீண்டும் எப்பொழுது செய்வீர்கள் என்று கேட்பார்கள். இந்த சாதத்துடன் உருளை கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.கொத்தமல்லி சாதம் எப்படி செய்வதென்று கீழ கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ கப் பொன்னி அரிசி
  • 3 பச்சை மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • இஞ்சி
  • கொத்தமல்லி இலைகள்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் வறுக்காத வேர்க்கடலை
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • 3 வரமிளகாய்
  • ½ கப் பெரிய வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சாதத்தை வடித்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து மிக்சியில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு பொரிந்ததும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  4. கடலை வறுபட்டதும், பெருங்காய தூள் சேர்த்து, அத்துடன் வரமிளகாய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வதங்கியதும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து, எலுமிசை சாறு சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மிதமான தீயில் வைத்து வடித்து வைத்த சாதத்தை சேர்த்து கிளறிவிடவும்.
  6. இப்பொழுது சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.