Summary: சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் இந்த குருமா வெவ்வேறு இடங்களில் வித விதமாக சமைத்து உண்கின்றன. அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் குருமா எவ்வாறோ, சைவப் பிரியர்களுக்கு வெஜிடபிள் மற்றும் காலிபிளவர் பட்டாணி குருமா. இவை செய்வது மிகவும் சுலபம். இப்பொழுது சுவையான பப்பாளி காய் குருமா செய்வதற்கு எளிமையான செய்முறையை காண்போம்.