காலை உணவுக்கு ருசியான மாங்காய் அடை தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!!

Summary: நம்மில் பலரும் தினசரி அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை. வீட்டில் எந்த உணவு வைக்க நேரம் இல்லை என்றால் உடனே கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து தோசை சுடுவது பலருக்கு வழக்கமான ஒன்று. அப்படி எப்போதும் அரிசி மாவு தோசையை மட்டும் சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு ஒரு புது விதமான அடை தோசை செய்து கொடுத்தால் ரொம்ப பிடித்தமாக இருக்கும். தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று அடை. எனவே, அடை தோசை ஒரு கிண்ணம் சாம்பார் மற்றும் சட்னியுடன் இணைக்கப்படும் போது, ​​ஆரோக்கியமான மற்றும் நிறைவான காலை உணவுக்கு சரியான தேர்வாகும்.

Ingredients:

  • 1 மாங்காய்
  • 1 கப் அரிசி மாவு
  • 1 கப் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் ரவை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 நறுக்கிய
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 தோசை கரண்டி
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் அதிகம் புளிப்பு இல்லாத பச்சை மாங்காயை தோல் சீவி நீளமா வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்திருக்கும் கடலை மாவு, அரிசிமாவு, பச்சை மாங்காய், மிளகாய் தூள், பெருங்காய தூள், தேவையான உப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. மாங்காய் எல்லாம் நன்றாக மசிந்து மாவு கட்டி கட்டாமல் தேவையான தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கவும்.
  4. பின்னர் அரைத்த மாவுடன் ரவை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  5. பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், இஞ்சி சேர்த்து வறுக்கவும்.
  6. அத்துடன் பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த மாவில் கலக்கவும். கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.
  7. அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசை வார்ப்பது போல் மெல்லிசா சுட்டு இரண்டு பக்கவும் திருப்பி போட்டு சுத்தி எண்ணெய் ஊற்றி முறுகலானதும் எடுத்து விடவும்.
  8. மிக சுவையான 10 நிமிடத்தில் செய்ய கூடிய வித்தியாசமான சுவையில் மொறு மொறு மாங்காய் காரசாரமான அடை தோசை தயார்.
  9. வெல்லம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்