இரவு உணவுக்கு ருசியான உளுந்து அடை இப்படி செய்து பாருங்க! 10 சாப்பிட்டாலும் பத்தாது!!

Summary: குழந்தைகளுக்கு இது போன்று ஒரு முறை உளுந்து அடை செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் பெண் குழந்தைகளுக்கு இது போன்று செய்து குடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் முழு உளுந்து
  • ¼ கப் அரிசி மாவு
  • 2 முட்டை
  • 2 டீஸ்பின் நெய்
  • 1 டம்பளர் கெட்டியான தேங்காய் பால்
  • 1 டம்பளர் சீனி

Equipemnts:

  • குக்கர்

Steps:

  1. முதலில் உளுந்தை மூன்று மணி நேரம் நன்கு ஊறவைக்கவேண்டும் . மற்ற தேவையான ஒருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. மிக்சியில் உளுந்தை கழுவி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பின்பு முட்டை, அரிசி மாவு, சீனி, தேங்காய் பால், இவற்றை அனைத்தும் மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துள்ளவும்.
  4. அதனை உளுந்து மாவில் கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். அதனை அகன்ற குக்கர் பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த மாவை ஊற்றி காலத்து விடவும்
  5. அடுத்து ரைஸ் குக்கரிலோ அல்லது பிரஷர் குக்கரிலோ வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடு வந்ததும் மாவு ஊதிய பாத்திரத்தை இதில் வைத்து மூடி வேக விடவும்.
  6. நன்கு வெந்ததும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.