ருசியான முட்டை கோஸ் பருப்பு கூட்டு இப்படி செய்து பாருங்க? சுட சுட சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!

Summary: நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த முட்டைகோஸ் பருப்பு கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இந்த முட்டைகோஸ் பருப்பு கூட்டு இருக்கும்.

Ingredients:

  • ½ கப் முட்டைகோஸ்
  • ¼ கப் பாசி பருப்பு
  • 1 மேசை கரண்டி எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 1 tbsp சீரகம்
  • ¼ tbsp சோம்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் மசாலா அரைக்க ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொண்டு அதில் துருவிய தேங்காய், சோம்பு, சீரகம் சேர்த்து மற்றும் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்னர் பாசி பருப்பை பாத்திரத்தில் சேர்த்து இரண்டு மூன்றும் முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள், பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பருப்பை சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
  3. பின் பருப்பு பாதியளவு வெந்ததும், அதில் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து பின் பருப்பு வெந்து நன்கு மென்மையாக மாறும் வரை நன்கு வேக வைத்து கொள்ளவும்.
  4. பின் இன்னொரு கடாயை மற்றொரு அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின்பு அதில் மிளகாய் தூள், மிக்ஸியில் அரைத்து தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், மற்றொரு அடுப்பில் உள்ள பருப்பு கலவையை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் முட்டை கோஸ் பருப்பு கூட்டு தயார்.