90's Kidsக்கு பிடித்த தித்திக்கும் பொறி உருண்டை செய்வது எப்படி ?

Summary: 90s கிட்ஸக்கு பிடித்தமான பொறி உருண்டை எப்படி செய்வது என்று தான் பார்க்க இருக்கிறோம். பொறி உருண்டை பிடிக்காத 90s கிட்ஸ் என இங்கு யாருமே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ஒரு பொறி உருண்டையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • 4 கப் வெல்லம்
  • 1 கப் வெல்லம்
  • 2 tbsp நெய்
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • ½ கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் ஒரு கப் துருவிய வெல்லத்தை சேர்த்து வெல்ல பாகு தயார் செய்ய வேண்டும்.
  2. இதனுடன் சிறிது அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி பின் வெல்ல பாகு தயார் செய்து கொள்ள வேண்டும், பின் நாம் தயார் செய்த வெல்ல பாகுவை ஒரு கடாயில் வடிகட்டியை வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு நாம் பொறி உருண்டை செய்வதற்கான பதத்திற்கு வெல்ல பாகுவை தயார் செய்ய வேண்டும், அதற்காக கடாயை மிதமான தீயில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு நெய், ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து.
  4. ஒரு 7 -8 நிமிடங்கள் நன்றாக கிளறி விட்டுக் கொண்டு இருங்கள் பாகு முறையடித்து வந்து அந்த முறை அடங்கும் வரை கிளறிவிட்டு ஏழு நிமிடங்கள் கழித்து நாம் தயார் செய்த பாகுவை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து ஒரு செட்டு பாகுபாடு தண்ணீரில் போடவும்.
  5. பின் தண்ணீருக்குள் கைவிட்டு அந்த பாகு எடுத்து பார்த்தால் கட்டியான பதத்தில் இருந்தால் வெல்ல பாகு தயாராகி விட்டது என்று அர்த்தம் பின்பு காடையை கீழ இறக்கி வைத்து கொள்ளவும்.
  6. பின் பாகு சூடாக இருக்கும் பொழுது நாம் எடுத்துக் கொண்ட பொறியை பாகுவில் சேர்த்து பாகு நன்றாக பொறியில் படும்படி கிளறிவிட்டு எல்லா பொறியும் பாகுவுடன் சேர்த்து கொள்ளவும்.
  7. பின் உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் சூடு ஆறுவதற்கு முன்னாடி முன்னதாகவே கையில் சிறிது அரிசி மாவு தொட்டுக்கொண்டு உருண்டை பிடித்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் 90's கிட்ஸ் பொறி உருண்டை இனிதே தயாராகிவிட்டது