சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட கரூர் எள்ளு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: எள் குழம்பு இந்த நாட்களில் மறக்கப்பட்ட நமது பாரம்பரிய குழம்புகளில் ஒன்றாகும். இது எள் விதைகள் மற்றும் வறுத்த தேங்காய் ஆகியவற்றிலிருந்து மிகவும் சுவையாக இருக்கிறது. எள்ளு குழம்பு செய்யும் வழக்கமான முறை மற்ற குழம்பு வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. எள்ளு குழம்பு என்பது எள்ளைக் கொண்டு செய்யப்படும் கறி. இது ஒரு தென்னிந்திய செய்முறையாகும், இது மக்கள் பொதுவாக சாதம், ஆப்பம் அல்லது தோசையுடன் பரிமாறுவார்கள். கூடுதல் சுவைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் கிரேவியை வளப்படுத்த கூடுதல் காய்கறிகளையும் சேர்க்கலாம். எள் விதைகள் பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

Ingredients:

  • 3 மேஜைக்கரண்டி எள்
  • 9 வர மிளகாய்
  • 1 மேஜைக்கரண்டி தனியா
  • 1 மேஜைக்கரண்டி பச்சரிசி
  • 1 மேஜைக்கரண்டி துவரம்
  • 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம்
  • 1 கப் சின்ன
  • 1 தக்காளி
  • 6 கத்தரிக்காய்
  • 1 முருங்கைக்காய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுந்து
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 3 குழி கரண்டி நல்லெண்ணெய்
  • 1/2 சிட்டிகை மஞ்சள்
  • புளி
  • 5 பல் பூண்டு
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை வைத்து அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  2. பின் எல்லையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  3. பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுந்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  5. பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. பின் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
  7. நன்கு கத்தரிக்காய், முருங்கைக்காய் வேகும் வரை மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.
  8. அது கொதித்த பின் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
  9. அவ்வளவுதான் சுவையான எள்ளு குழம்பு தயார்.