ருசியான மட்டன் குழம்பு சாப்பிட மணமணக்கும் மட்டன் மசாலா பொடி இப்படி செய்து பாருங்க!
Summary: கடைகளில் மசாலா பொடிகளை வாங்கி மட்டன் குழம்பு வைப்பதோடு வீட்டிலே சுலபமாக மட்டன் மசாலா பொடி இப்படி ஒரு முறை அரைத்து குழம்பு வைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும் நல்ல வாசனையாகவும் இருக்கும். நீங்களும் இப்படி ட்ரை பண்ணுங்க.
Ingredients:
100 கிராம் மிளகாய் வத்தல்
100 கிராம் தனியா
25 கிராம் சீரகம்
25 கிராம் சோம்பு
25 கிராம் பட்டை
10 கிராம்பு
½ கப் கறிவேப்பிலை
Steps:
முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் 4 மணி நேரம் காய வைக்கவும்.
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, எல்லாவற்றையும் லேசாக வறுத்து அதோடு காயவைத்த மிளகாய் வத்தலையும் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்.
அரைத்த மசாலா பொடியை ஒரு பேப்பரில் கொட்டி பரப்பி நன்கு ஆறவிடவும். ஆறியதும் காற்று படாத பாட்டிலில் எடுத்து வைக்கவும்.