தித்திக்கும் சுவையில் கோதுமை அப்பம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!!

Summary: நமது முன்னோர்கள் பண்டிகை நாட்களில் கூட இனிப்புக்காக இது போன்ற பனியாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்தப் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஆனால் தற்போதைய நாட்களில் இந்த பனியாரம் செய்வது நாளடைவில் குறைந்து கொண்டு வருகிறது இதன் சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும். இது போன்று நீங்கள் செய்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாக இருக்கும்.

Ingredients:

  • 100 கிராம் வெல்லம்
  • ½ கப் தண்ணீர்
  • 2 வாழைப்பழம்
  • 1 கப் கோதுமை
  • ¼ கப் அரிசி மாவு
  • ¼ tbsp ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை உப்பு
  • ¼ tbsp பேக்கிங் சோடா
  • தண்ணீர் தேவையான அளவு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் கோதுமை இனிப்பு பனியாரம் செய்வதற்கு வெல்லப்பாகு தயார் செய்ய ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 100 கிராம் துருவிய வெல்லத்தை சேர்த்து அதனுடன் அரைக்கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. பின் வெல்லம் நன்கு உருகி பாகுவாக வந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு இரண்டு வாழைப்பழங்களை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் அரைத்துக் கொண்ட வாழைப்பழத்தை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, கால் கப் அரிசி மாவு, கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் தயார் செய்த வெல்ல பாகுவை சேர்த்து நன்கு பிசைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு தயார் செய்த பனியார மாவை ஒரு 30 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள்.
  5. பின் 30 நிமிடம் ஊற வைத்த பின் கால் டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்பு கடாயை அடைப்பில் வைத்து பனியாரம் மூழ்கும் அளவிற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக வைக்கவும்.
  6. பின்பு ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி அது போல் இன்னும் நான்கு கரண்டி மாவை ஊற்றி கொள்ளுங்கள் பின் பனியாரம் நன்றாக இருந்து பொரிந்து வந்தவுடன் எடுத்து விடுங்கள். இப்படியாக மீதம் இருக்கும் மாவை ஊற்றி பனியாரம் தயார் செய்து கொள்ளவும். அவ்வளவு தான் கோதுமை இனிப்பு பணியாரம் இனிதே தயாராகிவிட்டது.