தித்திக்கும் சுவையில் தேங்காய் கேக் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

Summary: தித்திக்கும் சுவையில் தேங்காய் கேக் இது போன்று நீங்களும் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்டுவாங்க.எப்படி இந்த கேக் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 கப் மைதா மாவு
  • 1½ கப் தேங்காய் துருவல்
  • 1½ கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1 கப் பட்டர்
  • 1 கப் பால்
  • 3 முட்டை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் மைதாவை சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், எல்லாவற்றையும் போட்டு ஒன்றாக கலந்துகொள்ளவும்.
  2. கலந்து வைத்திருக்கும் மாவுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. முட்டையை அடித்து, அதில் பால், வென்னிலா எசன்ஸ் கலந்து கொள்ளவும்.
  4. இந்த கலவையை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  5. இறுதியில் தேங்காய் துருவலையும் இந்த மாவு கலவையில் சேர்க்கவும்.
  6. பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 f முற்சூடு செய்த அவனில் 30-40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  7. சுவையான தேங்காய் கேக் ரெடி.