வார இறுதி நாட்களில் ஸ்நாக்ஸாக இறால் பாக்கோட இப்படி செய்து பாருங்க!

Summary: டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு இறால் பக்கோடா இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.இது போன்று வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ கிலோ இறால் மீன்
  • 1 கப் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பௌலில் கடலை மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, மிளகாய் தூள், எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. 5 நிமிடம் அப்படியே இருக்கட்டும்.
  4. அடுத்து வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறாலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொறிக்க வேண்டும்.
  5. இறாலையும், மற்ற மசாலா பொருட்களையும் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து அப்படியே சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்.