அதிக சுவையும் மணமும் தரும் செட்டிநாடு மசாலா எப்படி வீட்டில் செய்வது ?

Summary: செட்டிநாடு சமையல் உணவுகளை நாம் அனைவரும் மிகவும் விரும்பும் படியான உணவு. ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் செட்டிநாடு மசாலா தான் அதன் சுவைக்கும் மனத்திற்கும் காரணம் ஆகையால் நீங்கள் செட்டிநாடு உணவு வகைகள் செய்ய விரும்பினால் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் செட்டிநாடு மசாலா பொருட்களை வாங்குவதற்கு பதிலாக. நீங்கள் வீட்டிலேயே இந்த செட்டிநாடு மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இன்று எப்படி செட்டிநாடு மசாலா பொடி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ tbsp தேங்காய் எண்ணெய்
  • 20 வர மிளகாய்
  • 6 tbsp மல்லி
  • 5 tbsp மிளகு
  • 5 கொத்து கருவேப்பிலை
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 10 துண்டு பட்டை
  • 4 நட்சத்திர சோம்பு
  • 5 மாரட்டினா உப்பு
  • 4 கருப்பு ஏலக்காய்
  • 1 tbsp ஏலக்காய்
  • ஜாதிக்காய்
  • 1 tbsp கிராம்பு
  • ½ tbsp வெந்தயம்
  • 2 tbsp பச்சரிசி
  • 2 ஜாதிப் பூ
  • 1 ½ tbsp சோம்பு
  • 1 tbsp சீரகம்
  • 3 tbsp கடல்பாசி
  • 1 tbsp கசகசா
  • 1 tbsp கல் உப்பு
  • 2 பிரியாணி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் வர மிளகாய், மல்லி மற்றும் மிளகு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு நாம் சேர்த்த பொருள்கள் அனைத்தையும் நன்கு வறுத்து ஒரு தட்டில் பேப்பரை வைத்து அதில் கொட்டிக் கொள்ளவும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து ஐந்து கொத்து கருவேப்பிலை இலைகளை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.
  3. கருவேப்பிலையை நன்கு வறுத்து எடுத்தவுடன் அதையும் மீத பொருட்களுடன் சேர்த்து கொட்டிவிட்டு. பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து துருவிய தேங்காயை சேர்த்து தேங்காய் பொன்னிறமாக வரும் முறை வதக்கி கொள்ளவும்.
  4. தேங்காய் துருவலை நன்றாக வதங்கியதும். அதையும் ஏற்கனவே நாம் வறுத்த பொருட்களுடன் சேர்த்து கொட்டி விடவும். அதன்பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து 10 துண்டு பட்டை, நட்சத்திர சோம்பு, மராட்டின் உப்பு, கருப்பு ஏலக்காய், ஏலக்காய், சிறிய அளவு ஜாதிக்காய், கிராம்பு, வெந்தயம் பச்சரிசி, ஜாதிப்பூ, சீரகம், கடல் பாசி மற்றும் போன்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  5. பின் இந்த பொருட்கள் கருகாமல் பக்குவமாக மிதமான தீயிலேயே வறுத்தெடுத்து இதையும் நாம் ஏற்கனவே வறுத்தெடுத்த பொருட்களுடன் சேர்த்து விடவும். பின்பு கல் உப்பு எடுத்து கடாயில் போட்டு ஈரப்பதம் போகும் வரை நன்றாக வறுத்து அதையும் இதனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  6. பின்பு கடைசியாக இரண்டு பெரிய பிரியாணி இலைகளை துண்டு துண்டாக வெட்டி அதையும் தனியாக நன்றாக வறுத்து இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து குளிர வைக்கவும்.
  7. அதன் பின் அனைத்து பொருட்களும் நன்றாக குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும் அவ்வுளவு தான் செட்டிநாடு மசாலா பொடி தயாராகிவிட்டது. இதை நீங்கள் அனைத்து விதமான செட்டிநாடு ரெசிபிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.