இட்லி, தோசைக்கு ஏற்ற கோங்குர சட்னி இப்படி செய்து பாருங்க!

Summary: வித்தியாசமா சுவைமிகுந்த இந்த சட்னி அரைச்சு பாருங்க. புளிச்ச கீரையை வைத்து சூப்பரான சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இதை கோங்குரா சட்னி என்றும் சிலர் சொல்வார்கள். இந்த புளிச்சக்கீரையை பக்குவமாக சட்னி செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில் இந்த துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குது அப்படின்னு தெரியவே தெரியாது. இதை இட்லி தோசை சப்பாத்தி என்று எல்லாவற்று தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் . சூப்பரான இந்த பாரம்பரிய ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

Ingredients:

  • 1 கட்டு புளிச்ச கீரை
  • 2 Tsp தனியா
  • 16 வர மிளகாய்
  • 1 கைப்பிடி பூண்டு
  • புளி
  • பெருங்காயம்
  • 1 Tsp கடுகு
  • 1/2 Tsp துவரம் பருப்பு
  • 1/2 Tsp உளுந்தபருப்பு
  • 1 Tbsp எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பெருங்காயம், வரமிளகாய், தனியா இவற்றை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. பின்பு நாம் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை கடாயில் சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து கொள்ளவும். பின் மிக்ஸியில் சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்த அரைத்து எடுக்கவும்.
  3. பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்து, பின் அதில் நசுக்கி பூண்டை சேர்த்து வதக்கவும்.
  4. இந்தக் கலவையில் அரைத்த கோங்குராச் சட்னியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். ஆந்திரா கோங்குரா சட்னி தயார். இதை சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.