மீன் ரோஸ்ட் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: உங்களுக்கு மீன் வறுவல் மிகவும் பிடிக்குமா? அப்போ இது போன்று ஒரு முறை மீன் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாக.எப்படி இந்த மீன் ரோஸ்ட் செய்வதென்று கீழ் கொடுக்கப்பட்ள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க,

Ingredients:

  • 2 துண்டுகள் மீன்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கொத்தமல்லி தழை
  • கறிவேப்பிலை
  • 5 துளிகள் எலுமிச்சை
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. பச்சை மிளகாய், மல்லி தழை, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு சிறிய பாத்திரத்தில் மீனை தவிர மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. மீன் துண்டுகளை பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையில் நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. ஒரு சிறிய பேனில் சிறிது வெண்ணெய் தடவி மீனை போட்டு பொன்னிறமாக மாறும் வரை அடிக்கடி திருப்பிப்போடவும்.
  5. இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் ரெடி.