அடிக்கிற வெயிலுக்கு இதமா ராயல் ஃபலூடா இப்படி செய்து பாருங்க! குளு குளுனு இருக்கும்!!!

Summary: கோடை காலத்தில், குளிர்ந்த ராயல் ஃபலூடா ரெசிபி செய்வதன் மூலம் என்றென்றும் மறக்கமுடியாத ருசியான மாற்று குளிர்ச்சியான உணவு நமக்கு கிடைக்கும். ராயல் ஃபலூடா தயாரிப்பதற்கான செய்முறை மிகவும் எளிதானது.

Ingredients:

  • 10 கிராம கடற்பாசி
  • சீனி
  • சேமியா
  • கலர் எஸன்ஸ்
  • கஸ்டர்ட்
  • பழங்கள்
  • சப்ஜா விதை
  • 1 டீஸ்பூன் கேரமல் ஸிரப்
  • 2 WAFER OR KIT KAT
  • நட்ஸ்

Equipemnts:

  • 1 பவுள்

Steps:

  1. கடற்பாசியை 3 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைத்த பிறகு,அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். தேவையான சீனி சேர்த்து கடற்பாசியை நன்றாக காய்ச்சவும்.
  2. கடற்பாசியை விருப்பத்திற்கேற்ப இரண்டு அல்லது மூன்று அகலமான தட்டில் ஊற்றி விருப்பப்பட்ட கலர் எஸன்ஸ்களை ஒவ்வொன்றிலும் கலந்து கட்டியானதும் சின்னத் துண்டுகளாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. சேமியாவை சீனி சேர்த்து தண்ணீரில் வேக விட்டு வடித்து கொள்ளவும். சேமியா குழைய வேகக் கூடாது. அவித்தசேமியாவை விருப்பப்பட்ட கலர் எஸன்ஸ்களை ஊற்றி கலந்து தனித்தனியாக வைக்கவும்.கஸ்டர்ட தயார் செய்து வைக்கவும்.விருப்பப்பட்ட பழங்களை சின்ன சின்னத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  4. சப்ஜா விதையை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.நட்ஸ்( NUTS) வகைகளை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் தனித்தனியாக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  5. ஃபலூடா கிளாஸை எடுத்து அதில் முதலில் சப்ஜா விதையை ஊற்றவும். அதன்மேல் ஒரு கலர் கடற்பாசியை கொஞ்சமாக வைக்கவும்.
  6. பிறகு பழங்கள் அடுத்து கஸ்டர்ட் சேமியா பிறகு வேறொரு கலர் கடற்பாசி, பழங்கள், கஸ்டர்ட் என உங்கள் விருப்பத்திற்கேற்பஒவ்வொரு அடுக்காக அழகாக வைக்கவும்.
  7. கடைசியில் ஐஸ்கிரீம் ஒரு க்யூப் வைத்து அதன்மேல் விருப்பத்திற்கேற்ப நட்ஸ் தூவவும். கேரமல் சிரப் கோகோ (அ) தேன் ஊற்றவும்.வேஃபர் (WAFER) (அ) கிட்கேட்( KIT KAT) வைத்து பரிமாறஅட்டகாசமாக இருக்கும்.