ஸ்நாக்ஸாக ஏதவாவது ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் வேர்க்கடலை பேடா இப்படி செய்து பாருங்க!!

Summary: கோவா பேடா அல்லது பால்கோவா பேடா இந்திய இனிப்பு வகைகளுள் சுவை மிகுந்தது. பண்டிகை, கல்யாணம் வந்தாலே இந்த பேடாவைத் தான் தயார் செய்வார்கள். பேடா என்பது இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்வீட்ஸ் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இந்த ஸ்வீட்டை விரும்பி செய்வர். பால் இதன் முக்கிய பொருளாகும். இந்தியாவின் எல்லா மூலை முடுக்கு கடைகளிலும் இது கிடைக்கக்கூடியது. இந்த வேர்க்கடலை பேடாவை எளிதாக கூடிய விரைவில் செய்து முடித்திடலாம். இதன் இனிப்பு சுவை நாவை சொட்டை போட வைக்கும். யாரும் வேண்டாம் என்று சொல்லாத அளவிற்கு எல்லாருக்குமே பிடித்தமான ஒரு ஸ்வீட்ஸ் ரெசிபி.

Ingredients:

  • 1 கப் வேர்க்கடலை
  • 1/4 கப் பால்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/4 கப் தண்ணீர்
  • 1 டீஸ்பூன் நெய்
  • ரெட் கலர்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் வேர்க்கடலையை லேசாக கடாயில் வறுத்துக் கொள்ளவும் நிறம் மாறக் கூடாது. வறுத்த வேர்க்கடலையை ஆறவிட்டு அதன் தோலை நீக்கி கொள்ளவும்.
  2. பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து துகள்களாக அரைத்துக்கொள்ளவும் தொடர்ந்து அரைத்தால் எண்ணெய் வெளியே வந்து விடும் அதன் பிறகு ருசி நன்றாக இருக்காது. அரைத்த வேர்க்கடலையை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் பால் பவுடரையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
  4. சர்க்கரையை எடுத்து கடாயில் சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  5. ஒரு கம்பி பதம் வந்ததும் நாம் பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலையை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து லேசாக சுருண்டு வரும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.
  6. சரியான பதமா என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் எடுத்து போட்டு கையில் உருட்டினால் உருட்ட வரவேண்டும் அதுதான் பதம்.
  7. இறுதியாக நெய் சேர்த்து ஒரு தடவை கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  8. லேசாக சூடு இருக்கும்போது அதை நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்பொழுதுதான் மிகவும் மிருதுவாக இருக்கும்.
  9. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள பேடாவை உருண்டைகளாக உருட்டி நடுவில் லேசாக அமுக்கினால் பள்ளமாக இருக்கும் அதில் ஒரு கிராம்பை வைத்தால் பார்ப்பதற்கு ஆப்பிளின் காம்பு போலிருக்கும்.
  10. ஒரு சிறிய கிண்ணத்தில் ரெட் ஃபுட் கலரை எடுத்து அதில் பிரஸ்சை முக்கி பேடா மீது லேசாக மேலே தேய்க்கவும் பார்ப்பதற்கு ஆப்பிள் போலவே இருக்கும்.
  11. இப்போது சுவையான இனிப்பான வேர்க்கடலை பேடா தயார்.